WC - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்

#Afghanistan #T20 #Cricket #WorldCup #2024
Prasu
2 years ago
WC - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. 

தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறி விட்டன.

அந்த வகையில், இன்று காலை நடைபெற்ற தொடரின் 29-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. 

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக, நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் க்ரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறியது.

க்ரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 

இதன் காரணமாக க்ரூப் சி-யில் நியூசிலாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4