கும்ப ராசியினர் நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
கும்ப ராசியினர் நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும். எதிர்ப்பு விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். கார்த்திகை 1: உங்கள் முயற்சி முன்னேற்றம் காணும் நாள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு. இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளை வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். ரோகிணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். மிருகசீரிடம் 1,2: மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி அடைவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். திருவாதிரை: உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது. புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் முயற்சி லாபமாகும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும். பூசம்: எதிர்பார்த்த உதவி வரும். நீங்கள் ஈடுபடும் செயலில் சிந்தித்து செயல்படுவது அவசியம். ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும். யோகமான நாள்.

சிம்மம்

மகம்: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர். பூரம்: தொழிலில் உண்டான போட்டியை சரிசெய்வீர். உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். உத்திரம் 1: ஒரு செயலை போராடி முடிப்பீர். பொருளாதார நிலை உயரும். வரவு செலவில் கவனம் தேவை.

கன்னி

உத்திரம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். அஸ்தம்: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். வெளியூர் பயணத்தால் மனம் சோர்வடையும். சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். 

துலாம்

சித்திரை 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். செலவிற்கேற்ற வருவாய் வரும். இறைபக்தி உங்களைப் பாதுகாக்கும். சுவாதி: சிலரால் நெருக்கடிக்கு ஆளாக்குவீர்கள். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: வராமல் இருந்த பணம் உங்களைத் தேடிவரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கோயில் வழிபாட்டால் நிம்மதி உண்டாகும். அனுஷம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். கேட்டை: உங்கள் செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். மற்றவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். 

தனுசு

மூலம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். பூராடம்: எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் உயரும். உத்திராடம் 1: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருவோணம்: கடவுள் வழிபாட்டில் ஏற்றம் காண வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட நன்மை அதிகமாகும். அவிட்டம் 1,2: செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி இன்று வேண்டாம். சதயம்: பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் சில செயல் நடந்தேறும். பூரட்டாதி 1,2,3: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: நன்மை காணும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். உத்திரட்டாதி: குழப்பத்திற்கு ஆளாவீர். நட்புகளால் சங்கடம் தோன்றும். குடும்பத்தில் நெருக்கடியான நிலை இருக்கும். ரேவதி: உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த வரவு உங்களைத்தேடிவரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.