பரவலாக பெய்யும் மழை : காற்றின் வேகமும் அதிகரிப்பு!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பரவலாக பெய்யும் மழை : காற்றின் வேகமும் அதிகரிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16.06) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பரவலாக மழை பெய்யும்.

 நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் முதல் புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 1 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். 

மேற்கண்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 60 கி.மீ. ஆக அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4