கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை அணி
ரி 20 உலகக் கிண்ண போட்டிகளில் 200 க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்ற இரண்டாவது அணியாக இலங்கை தடம் பதித்துள்ளது.
ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகின்றது.
Gros Islet இல் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் Logan van Beek, 45 ஓட்டங்களுககு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதற்கமைய இலங்கை அணி இந்த போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி சார்பாக Michael Levitt மற்றும் Scott Edwards ஆகிபோர் தலா 31 ஓட்டங்களை எடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் துஷார் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.