பிரான்சில் திருடப்பட்ட காவல்துறையினரின் 8 துப்பாக்கிகள்

#Police #France #Weapons #Robbery
Prasu
1 year ago
பிரான்சில் திருடப்பட்ட காவல்துறையினரின் 8 துப்பாக்கிகள்

காவல்துறையினரின் கைத்துப்பாக்கிகள் எட்டு திருடப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது அவை திருடப்பட்டுள்ளன.

பிரான்சின் தெற்கு பகுதியான Béziers (Hérault) நகரின் அருகே உள்ள வெட்டைவெளி பகுதியில் காவல்துறையினருக்காக துப்பாக்கி சுடும் பயிற்சி இடம்பெற்றது. 

அங்கு ஜூன் 11 - 12 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் பிஸ்ட்டல் வகை துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளில் குறித்த துப்பாக்கி சுடும் பயிற்சி இடம் பாதுகாப்பற்றது எனவும், அங்கு மின்சார வசதி கூட இல்லை எனவும், துப்பாக்கிகளை பாதுகாப்பாக வைப்பதற்குரிய பெட்டகங்கள் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, துப்பாக்கிகள் மட்டுமே திருடப்பட்டதாகவும், சன்னங்கள் எதுவும் திருடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4