தனுசு ராசிக்காரர்கள் அனுசரித்தால் முயற்சிகள் வெற்றியாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
தனுசு ராசிக்காரர்கள் அனுசரித்தால் முயற்சிகள் வெற்றியாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: காலையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் அதன்பின் செயல்களில் நிதானம் அவசியம். பரணி: செயல்களில் கவனம் செலுத்துவதால் நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் நிறைவேறும். கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சிந்தித்து செயல்படுவதால் அதிக நன்மை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டிருந்த முயற்சி வெற்றியாகும். உங்கள் செயல் லாபமாகும். வழக்கு சாதகமாகும். ரோகிணி: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எண்ணம் நிறைவேறும். செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். திருவாதிரை: விரைந்து செயல்பட்டு மேற்கொண்ட செயலை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் வரும். புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

கடகம்

புனர்பூசம் 4: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பூசம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள். ஆயில்யம்: உங்களது முயற்சி தள்ளிப்போகும். மற்றவரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். சிலர் கோயிலுக்கு செல்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பூரம்: வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அஸ்தம்: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவு வரும். சித்திரை 1,2: உங்களது முயற்சி பலிதமாகும். பலநாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கோயிலுக்கு செல்வீர்கள். சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சி வெற்றியாகும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். விசாகம் 1,2,3: மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் முயற்சியில் இழுபறி இருக்கும். நீங்கள் நினைப்பதற்கு மாறாக இன்று சில செயல்கள் நடைபெறும். அனுஷம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சங்கடங்கள் விலகும். கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கும்.

தனுசு

மூலம்: காலையில் எதிர்பார்த்த வரவு வரும். அதன்பின் செலவு தோன்றும் என்பதால் கவனம் அவசியம். பூராடம்: மற்றவரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும். உத்திராடம் 1: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலைபளு அதிகரித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்ததை சாதிக்கும் நாள். திருவோணம்: எதிர்பார்த்த வருவாய் வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: பழைய முதலீட்டில் இருந்து இன்று ஆதாயம் தோன்றும். எதிர்பார்த்த தகவல் வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் தோன்றும். சதயம்: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உத்திரட்டாதி: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த செயலில் லாபம் உண்டாகும். ரேவதி: காலையில் உங்கள் முயற்சியில் நெருக்கடி ஏற்பட்டாலும் அதன்பின் நிலைமை சீராகும்.