WC - 194 ஓட்டங்களை குவித்த தென் ஆப்பிரிக்கா அணி

#America #T20 #Cricket #WorldCup #SouthAfrica
Prasu
4 months ago
WC - 194 ஓட்டங்களை குவித்த தென் ஆப்பிரிக்கா அணி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. 

இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன. இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 11 ரன்னில் வெளியேறினார்.

2வது விக்கெட்டுக்கு டி காக்குடன் மார்கிரம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்ரேட்டை உயர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் டி காக் 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். 

மார்கிரம் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்குகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!