பெரியோர் ஆதரவால் மீன ராசியினரின் செயல் லாபமாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
பெரியோர் ஆதரவால் மீன ராசியினரின் செயல் லாபமாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். பரணி: சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவது அவசியம். புதிய வேலைகள் இன்று வேண்டாம். கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். ரோகிணி: எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். பிரச்னைகள் காணாமல் போகும். மிருகசீரிடம் 1,2: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள். உறவினர்கள் உதவி செய்வார்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இழுபறியாக இருந்த சொத்து விவகாரத்தை பேசித்தீர்ப்பீர்கள். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை: எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். பணவரவு அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: மனக்குழப்பம் கூடும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். கவனமாக செயல்படவும். ஆயில்யம்: உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். நீண்டநாள் முயற்சி அனுகூலமாகும்.

சிம்மம்

மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். பூரம்: சுற்றி இருப்பவர்களைப்பற்றி தெரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவு மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும். பேச்சில் எச்சரிக்கை அவசியம். அஸ்தம்: கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை தேவை. சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். வரவேண்டிய பணம் வரும்.

துலாம்

சித்திரை 3,4: முயற்சியில் எதிர்பாராத தடைகள் தோன்றும். பண நெருக்கடியால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3: எதிர்பாராத வருவாயை அடைவீர்கள். புதிய முயற்சி லாபம்தரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வரும். நண்பர்களால் ஒரு முயற்சி நிறைவேறும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத்தேடி வரும். கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

தனுசு

மூலம்: மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பூராடம்: எதிர்ப்புகளை சமாளித்து முயற்சியில் வெற்றி அடைவீர்கள். செலவிற்கேற்ற வரவு வரும். உத்திராடம் 1: செலவுகள் செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்ப்புகள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். திருவோணம்: எதிர்பாராத வரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட்டு ஆதாயம் காண வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். இன்றைய வேலைகளை ஒத்தி வைப்பீர்கள். சதயம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: அதிர்ஷ்டமான நாள். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். பணவரவு திருப்திதரும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உத்திரட்டாதி: மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும். உடல்நிலையில் கவனம் அவசியம். ரேவதி: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். பெரியோர் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும்.