விருச்சிக ராசியினருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ள உகந்த நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
விருச்சிக ராசியினருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ள உகந்த நாள் - ராசிபலன்

மேஷம்:

அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பரணி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும். கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியின் காரணமாக தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் வருமானம் உயரும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபார போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆயில்யம்: உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபம் ஏற்படும். பூரம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தில் தடைகள் தோன்றும். உத்திரம் 1: சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அஸ்தம்: முயற்சி இழுபறியாகும். உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். வழிபாட்டில் மனம் செல்லும். சித்திரை 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

துலாம்

சித்திரை 3,4: நீண்ட நாள் இன்று முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சுவாதி: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். விசாகம் 1,2,3: உடல்நலம் மேம்படும். நண்பர்கள் உதவியால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்களை விட்டு விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேட்டை: திட்டமிட்ட வேலைகள் தள்ளிப்போகும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு

மூலம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்க வேண்டாம். உத்திராடம் 1: நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர்கள். தடைபட்ட வருவாய் தேடி வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திருவோணம்: ஊழியர்களால் சில சங்கடங்கள் தோன்றும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். அவிட்டம் 1,2: உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த முயற்சி இன்று லாபம் தரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர்கள். வெளியூர் பயணத்தால் சங்கடம் தோன்றும். அமைதி காக்கவும். பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி வெற்றிதரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திரட்டாதி: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். உத்தியோகத்தில் தோன்றிய சங்கடம் நீங்கும். ரேவதி: மனதில் குழப்பம் கூடும். செயலில் நெருக்கடி ஏற்படும். வழிபாட்டால் நன்மைக் காண வேண்டிய நாள்.