மகனை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்து தாய்க்கு அனுப்பிய தந்தை கைது!

#SriLanka #Arrest #Attack
Mayoorikka
2 years ago
மகனை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்து தாய்க்கு அனுப்பிய தந்தை கைது!

தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தாயாருக்கு அனுப்பிய 26 வயதுடைய தந்தையொருவர் கைது செய்யப்பட்டதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். 

 குறித்த நபர் நேற்று மாலை 5:30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். . கம்பஹா தோட்டம், மேல் பிரிவு உடுபோக உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றதாகவும், தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் குழந்தையை அடிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இந்த வீடியோவை ஏனைய சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 தாக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை, வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், ஊவா பரணகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப கபில கல்லகே, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4