பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை 40 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கான அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை உள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்  பிரதீப் சபுதந்திரி குறிப்பிட்டார்.

இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4