விஜயின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
விஜயின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ!

நடிகர் விஜய் இன்று (22.06) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில். விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இதன்படி முன்னதாக ஒரு பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான "சின்ன சின்ன கண்கள்" பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. 

இந்நிலையில், அடுத்த சர்ப்ரைசாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அந்த பதிவில், " தளபதி விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வேணாமா..! நள்ளிரவு 12.01 மணிக்கு சந்திப்போம்..ஏனென்றால் இது கோட் பிறந்தநாள் ஷாட்ஸ்" என குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டது. பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை வேகமாக நெருங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4