இலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் ஸ்தலத்தில் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் ஸ்தலத்தில் பலி!

அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த குடும்பம் ஒன்று கோர விபத்துக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், தாயும் மகளும் உயிரிந்துள்ளனர். 

 பொசன் போயாவை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் இன்று உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் சென்றுள்ளனர். 

 இதன் போது, ​​தம்புள்ளை பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து, ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.  

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த 54 வயதான தாய் தம்மிகா பத்மினி மற்றும் 17 வயதான மகள் சசினி தாரகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற மகனும், பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4