மீனவர்கள் போராட்டம்: பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இழப்பு

#SriLanka #Tamil Nadu #Protest #Fisherman
Mayoorikka
2 years ago
மீனவர்கள் போராட்டம்: பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இழப்பு

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 600க்கு மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

 இந்த நிலையில் நெடுத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று விசைப்படகும் அதில் இருந்த 22 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

 இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதோடு நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 மேற்பட்ட மீன்பிடி தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி வருகின்றது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4