போரினால் தடைப்பட்ட படிப்பு : 83 ஆண்டுகளுக்கு பின் சாதித்த மூதாட்டி!
இரண்டாம் உலகப்போரினால், தடைப்பட்ட தனது படிப்பை, இப்போது தனது 105வது வயதில் முடித்து பட்டம் பெற்றுள்ளார் ஒரு மூதாட்டி.
அமெரிக்காவில் ஸ்டேன்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இளம் வயதினர் மத்தியில் இந்த மூதாட்டி தனது பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில், 1940ம் ஆண்டு கின்னி என்பவர் தனது இளங்கலை பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். ஆனால் அதன்பின்னர் அவரது காதலன் உலகப்போரில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதால், முதுகலை படிப்பின் ஆய்வில் இருந்த கின்னி, அதை பாதியிலேயே விட்டுவிட்டு காதலனுடன் சென்று, அவருடைய பணிக்கு உதவியாக இருந்தார்.
எனவே தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு, முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டத்தை வாங்கிக்கொண்ட கின்னி, பின் இதுகுறித்து பேசுகையில், “Oh My God! முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பு பெறலாம்.” என்று தெரிவித்துள்ளார்.