வரி உயர்வு போராட்டம் - தீக்கிரையான கென்ய பாராளுமன்றம்
கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையிலான நிதி மசோதாவை தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் வெடித்தது.
கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வந்து நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
திடீரென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு தீவைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது இருவர் உயிரிழந்தனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில உயிரிழப்பு நடைபெற்றது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.