வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படும் பாகிஸ்தானியர்கள்
#Hospital
#Pakistan
#heat
#Climate
Prasu
5 months ago
பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியில் நிலவும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றாக பாதித்துள்ளது.
அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி சிந்து மாகாணத்தில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் (117 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், அதிகளவில் தண்ணீர் அருந்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மே மாதம் தொடங்கிய வெப்பம் அடுத்த வாரம் குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காலநிலை மாற்றத்தால் உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் பருவமழை தாக்கத்தையும் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.