கிழக்கு உக்ரைனின் தலைமை இராணுவத் தளபதியை பதவி நீக்கிய உக்ரேனிய ஜனாதிபதி
எந்தவொரு ரஷ்ய ஜெனரலையும்விட அதிகமான உக்ரேனிய வீரர்களைக் கொன்றதாக கிழக்கு உக்ரேனின் தலைமை ராணுவத் தளபதியை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் யூரி சோடோலுக்கு பதிலாக பிரிக் ஜெனரல் ஆண்ட்ரி ஹனாடோவ் நியமிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி வெளியிட்ட காணொளியில் அறிவித்தார்.
உக்ரேனின் மதிப்புமிக்க அசோவ் படைப்பிரிவின் தலைவரான போவ்டான் க்ரோடெவிச், ஜெனரல் யூரி சோடோல், ராணுவப் பின்னடைவுகளையும் வீரர்களுக்கு பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டிய ஒருநாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக ஒன்றியத்தில் அமைச்சர்கள் சிலரைச் சந்திக்க கியவ் அதிகாரிகள் லக்சம்பர்க்கிற்கு வந்துள்ள வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
உக்ரேன் உறுப்பினராவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றாலும், இந்தச் சந்திப்பு இணைப்பு செயல்முறையின் தொடக்கமாக இருக்கும். “புட்டின் உக்ரேனை இணைக்க விரும்பினார்.
மாறாக உக்ரேன் முன்பைவிட இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக உள்ளது,” என்று கூட்டத்திற்கு முன்னதாக, ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் கூறினார்.