இலங்கையின் கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்று (26.05) அதிகாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்துக்கு அமலில் இருக்கும்.  

இதன்படி, அரபிக் கடல் பகுதியில் செயற்படும் பல நாள் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் உரிய அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை காரணமாக அரபிக்கடற்பரப்பில் 65-75 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலமான காற்று வீசக்கூடும் மற்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மாகாணம், குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில்  50மி.மீற்றர்  அதிகபட்சம் மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4