முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே மூவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே மூவர் பலி!

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த  பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று (25.06) நள்ளிரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

விபத்தில்   திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழந்து மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து அவசர அன்புடன் சேவை மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் உள்ளன சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4