இஸ்ரேல் தூதரகம் முன்பு அதிகாரி மீது தாக்குதல் - குற்றவாளி சுட்டுக்கொலை
செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அதிகாரியின் கழுத்தில் இரும்பு போல்ட் (Bolt) ஆல் பயங்கரமாக தாக்கினார்.
இதனால் அந்த அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். கழுத்தில் காயம் அடைந்த அதிகாரி, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான மர்ம நபரை துபாக்கியால் சுட்டார். இதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே காயம் அடைந்த அதிகாரி மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஆபரேசன் செய்து போல்ட் நீக்கப்பட்டது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் கானும் பணி நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்துவதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் செர்பியா உள்துறை மந்திரி இவிகா டேசிக் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவை செர்பில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.