துலா ராசியினருக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயன் தரும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
துலா ராசியினருக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயன் தரும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் ஏற்படும்.பரணி: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். கோயில் வழிபாட்டால் நிம்மதி உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.ரோகிணி: வெளியூர் பயணம் நன்மை தரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தடைபட்டிருந்த வருவாய் வரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். திருவாதிரை: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். உறவினரால் சங்கடம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவு வரும்.பூசம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆயில்யம்: தடைப்பட்டிருந்த செயல்கள் நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். யோகமான நாள்.

சிம்மம்

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.பூரம்: உங்கள் ஆற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.உத்திரம் 1: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம் என்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். வாகனப் பயணத்தில் இன்று நிதானம் அவசியம்.சித்திரை 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கவனமுடன் செயல்படுவதால் நெருக்கடி நீங்கும். 

துலாம்

சித்திரை 3,4: முயற்சி ஆதாயம் தரும். வெளியூர் பயணம் லாபத்தை உண்டாக்கும். சுவாதி: நண்பர்கள் உதவியுடன் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன்தரும். 

விருச்சிகம்

விசாகம் 4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள்.அனுஷம்: ஆரோக்கியம் சீராகும். நினைப்பது நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.கேட்டை: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். 

தனுசு

மூலம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி சங்கடப்படுத்தும்.பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். உத்திராடம் 1: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். ஆதாயமான நாள்.அவிட்டம் 1,2: மற்றவர் வார்த்தைகளைக்கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். அதனால் சங்கடம் தோன்றும். 

கும்பம்

அவிட்டம் 3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.சதயம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். நினைத்ததை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: போட்டியாளரால் நெருக்கடியை சந்திப்பீர்கள். இன்று வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும். 

மீனம்

பூரட்டாதி 4: வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். தெளிவுடன் செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்கள். உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணத் தேவை பூர்த்தியாகும்.