பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

#Election #Parliament #France #President #Vote
Prasu
2 months ago
பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

பிரான்சில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என அதிபர் மேக்ரான் தெரிவித்தார். 

அதன்படி, பிரான்ஸ் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது.

அங்கு 4.90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தமுள்ள 577 இடங்களுக்கான இந்த தேர்தல் இரு சுற்றுகளாக நடைபெற உள்ளது.

வலதுசாரியான மரைன் லீ பென்னின் தேசிய பேரணி கட்சி இந்த முறை மக்களின் பெரும் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி ஆதிக்கம் செலுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. 

தேசிய பேரணி கட்சி முன்வைத்த வாக்குறுதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தனது வாக்கை இன்று பதிவு செய்தார்.

முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. 

அதன்பின்னரே, தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தங்கள் கட்சி 289 இடங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றால் மட்டுமே பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாக தேசிய பேரணி கட்சி தெரிவித்துள்ளது.