சிங்கப்பூரில் புறாக்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
சிங்கப்பூரில் புறாக்கள் அதிகம் இருக்கும் 3 வட்டாரங்களில் அடுத்த 6 மாதங்களுக்கு எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.
பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் இந்த முன்னோடித் திட்டம் இந்த மாதம் தொடங்கும் எனவும் புறாக்களின் எண்ணிக்கையை நேரடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
புறாக்கள் சாப்பிடும் உணவுக் கழிவுகளைக் குறைப்பது ஆகிய 2 நடவடிக்கைகள் எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நகர மன்றங்கள், தேசியப் பூங்காக் கழகம் (NParks), தேசியச் சுற்றுப்புற அமைப்பு (NEA), சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆகியவற்றின் கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
உணவும் தங்குமிடமும் எளிதாகக் கிடைக்கும்போது புறாக்கள் விரைவில் இனப்பெருக்கம் காண்கின்றன.
அதனால் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்று அறிக்கை கூறியது.
கடந்த 2021ஆம் ஆண்டு COVID-19 நோய்த்தொற்றுக் காலத்தில் உணவுக் கடைகளில் அமர்ந்து உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் புறாக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது