ட்ரம்ப் மீதான வழக்குகள் குறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
ட்ரம்ப் மீதான வழக்குகள் குறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருக்கும் போது அவர் ஆற்றிய பணிகளுக்காக கிரிமினல் வழக்குகள் தொடர முடியாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு தரப்பினர் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ததையடுத்து, தனக்கு அதிபர் பதவியில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடக் கோரி டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நேற்று (01.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய உத்தியோகபூர்வ கடமைகள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடர முடியாது என அந்தத் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதன்படி, நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் 6 பேரின் பெரும்பான்மைத் தீர்ப்பு, தற்போதைய ஜனாதிபதியின் கடமைகளில் ஜனாதிபதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் டிரம்ப் மீது பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு இந்த முடிவு கடும் சவாலாக இருக்கும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்க உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறை. எனினும், இந்த முடிவு சட்டத்தின் ஆட்சியை முற்றிலுமாக மீறுவதாகவும், தவறான முன்னுதாரணம் எனவும் தற்போதைய அதிபர் ஜோ பைடன்குற்றம்சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!