நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நேபாள பிரதமர்
நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம்.
நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தெயுபா கம்யூனிஸ்ட் கட்சியான நேபாளம் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியுடன் ஒருங்கிணைந்து தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் பிரசண்டா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
நேபாள காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் 89 இடங்களும் பெரிய கட்சியாக விளங்குகிறது CPN-UML-க்கு 78 இடங்கள் உள்ளன.
மெஜாரிட்டிக்கு 138 இடங்கள் தேவை. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் 167 இடங்கள் உள்ளன.