மீன ராசியினருக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
மீன ராசியினருக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நெருக்கடி தீரும். முயற்சியில் வெற்றி காண்பீர்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபமாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: உங்கள் அணுகுமுறைகளை மற்றவர் பாராட்டுவர். திட்டமிட்ட வேலை எளிதாக நடந்தேறும்.மிருகசீரிடம் 1,2: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வருமானம் இழுபறியாகும். மனக் குழப்பம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வரவை விட செலவு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும்.திருவாதிரை: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். யோகமான நாள்.புனர்பூசம் 1,2,3: முயற்சியில் தடை தாமதம் என உண்டாகும். இன்று யோசித்து செயல்படுவது நல்லது.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் முயற்சியில் இழுபறி ஏற்படும். புதிய நட்புகளால் பிரச்னைகளை சந்திப்பீர். பூசம்: பயணத்தால் லாபம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர். எதிர்காலம் குறித்து கவலை உண்டாகும்.

சிம்மம்

மகம்: பொருளாதார நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.பூரம்: உங்கள் முயற்சி பலன்தரும். வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர்.உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.அஸ்தம்: நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சித்திரை 1,2: கடுமையாக முயற்சி செய்தும் உங்கள் வேலை இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். குழப்பம் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.சுவாதி: யோசித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர். நினைப்பது நிறைவேறும்.விசாகம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி இன்று வேண்டாம். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்:

விசாகம் 4: உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர் என்றாலும், எதிர்பார்த்த வருமானம் ஏற்படாமல் போகும்.

தனுசு

மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியடையும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த தகவல் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்டிருந்த வேலையை நடத்தி முடிப்பீர். லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். செயல் இழுபறியாகும். கடவுள் வழிபாட்டால் நன்மை அடையும் நாள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உறவினர் உங்களுக்கு எதிராக மாறுவர். திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.சதயம்: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: குடும்ப சொத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். உங்கள் முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: திட்டமிட்ட முயற்சி நிறைவேறாமல் சங்கடப்படுவீர். எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.ரேவதி: கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி புரிவர்.