இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி

#Election #Parliament #England #RishiSunak
Prasu
4 months ago
இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தன் மனைவி அக்ஷிதா மூர்த்தியுடன் நார்த் யார்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் அருகிலுள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

இதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களுக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரதமர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.

இந்த தேர்தலில் தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!