வீரர்களை வரவேற்க மும்பையில் குவிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள்

#India #people #T20 #WorldCup #Mumbai
Prasu
2 years ago
வீரர்களை வரவேற்க மும்பையில் குவிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில், இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர்.

இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வருவார்கள் என தெரிவித்திருந்தது. 

இதனையடுத்து பேரணி நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

மும்பையில் வெற்றிப்பேரணி நடைபெறும் மரைன் டிரைவ் பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!