பிரான்ஸில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
பிரான்ஸில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (07.07) இடம்பெற உள்ளது.
பிரான்ஸில் முதல் முறையாக வெளிநாட்டு வாக்காளர்களையும் வாக்களிக்கவைக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி 3.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களுக்கான மாற்று வாக்காளர்களை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அல்லது வேலை நிமிர்த்தம் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு மாற்றாக, பிறிதொருவரை வாக்களிக்க அனுமதிப்பதே இந்த நடைமுறையாகும்.
கடந்தவாரம் இடம்பெற்ற முதலாம் கட்ட வாக்குப்பதிவின் போது 2.6 மில்லியன் பேர் தங்களுக்கான பிறிதொருவரை வாக்காளரை அறிவித்திருந்தார்கள்.
இந்த எண்ணிக்கையே கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.