மீண்டும் வெற்றி பெறுவேன் - அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
டிரம்ப் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். 81 வயதான அவரால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை நேரடி விவாதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நேரடி விவாதத்தில் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் அவர் தோல்வியை தழுவலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இதனால் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை மாற்ற வேண்டும் என அவரது சொந்த கட்சியினரே கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
டிரம்புடனான விவாதத்தின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சளி பிடித்து இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். நேரடி விவாதத்தில் சரியாக செயல்படாததற்கு நான்தான் காரணம்.
இதில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஜனநாயக கட்சியில் எனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே வெளியேறுவேன்.
நான் போட்டியில் இருந்து வெளியேறும் எண்ணம் எதுவும் இல்லை. மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.