முயற்சியில் வெற்றி அடையும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் ரிஷப ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
முயற்சியில் வெற்றி அடையும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் ரிஷப ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட தாமதமாகும் நாள்.கார்த்திகை 1: சாமர்த்தியமாக செயல்பட்டு சாதனை புரியும் நாள். வியாபாரத் தடையகலும். லாபம் அதிகரிக்கும். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர். பிறரால் லாபம் அதிகரிக்கும். ரோகிணி: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச்செல்வர். நேற்றைய எண்ணம் நிறைவேறும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: கடவுள் வழிபாட்டால் ஏற்றம் காணும் நாள். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய பிரச்னை உருவாகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். செலவு கட்டுப்படும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்துச் செல்வதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை.பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர்.ஆயில்யம்: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர். செயலில் எதிர்பாராத தடை உண்டாகும். 

சிம்மம்

மகம்: வரவேண்டிய பணம் வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். ஆதாயமான நாள்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடம் குறையும்.உத்திரம் 1: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். 

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரியோர் ஆதரவால் பிரச்னை தீரும்.அஸ்தம்: நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். விடா முயற்சியால் வெற்றி அடைவீர்.சித்திரை 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். 

துலாம்

சித்திரை 3,4: உத்தியோத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். உங்கள் முயற்சிக்கு நண்பர் உதவி புரிவர். விருப்பம் நிறைவேறும்.சுவாதி: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். உங்கள் அறிவாற்றலால் நீங்கள் நினைத்ததை அடைவீர். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தைவழி உறவால் ஒரு வேலை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவால் ஆதாயம் தோன்றும்.கேட்டை: பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் நெருக்கடி உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். செயல் லாபமாகும். யோகமான நாள்.பூராடம்: எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: நினைப்பது நிறைவேறும் நாள். தடைப்பட்டிருந்த வேலை இன்று நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர். பணத்தேவை பூர்த்தியாகும்.திருவோணம்: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். நீங்கள் விரும்பாதவற்றை பிறர் செய்வார்கள். எதிர்ப்புகளை சந்திக்கும் நாள்.அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். 

கும்பம்

அவிட்டம் 3,4: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்களைவிட்டு விலகிச் சென்றோர் உங்களைத் தேடி வருவர்.சதயம்: பிறரால் குடும்பத்தில் சங்கடம் தோன்றும். தொழில் போட்டியாளரின் தொல்லை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.பூரட்டாதி 1,2,3: முயற்சியில் ஏற்பட்ட சிக்கல் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 

மீனம்

பூரட்டாதி 4: பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். உத்தியோகத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைப்பட்டிருந்த செயல் நடந்தேறும்.ரேவதி: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!