கனடாவில் காணாமல் போன 3 மலையேறிகள் சடலங்களாக மீட்பு

#Death #Canada #Mountain #climbers
Prasu
3 months ago
கனடாவில் காணாமல் போன 3 மலையேறிகள் சடலங்களாக மீட்பு

கனடாவில் காணாமல் போன மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஸ்குவாமிஷ் பகுதியில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மலையேறிகள் மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Atwell Peak மலையுச்சியில் ஏறும் நோக்கில் கடந்த மே மாதம் குறித்த பகுதிக்கு இந்த மூன்று பேரும் சென்றுள்ளனர். எனினும் சில தினங்களின் பின்னர் குறித்த நபர்குள் பற்றிய அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

பனிப்பாறைகளைக் கொண்ட குறித்த மலைத் தொடரின் உச்சியை அடையும் முயற்சியின் போது பல்வேறு சவால்களை இந்த மலையேறிகள் எதிர்நோக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 எவ்வாறெனினும் குறித்த மலையேறிகளின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!