பிரான்ஸ் தேர்தல் - 400000 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு

#Election #Parliament #France #people #Vote
Prasu
3 months ago
பிரான்ஸ் தேர்தல் - 400000 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு

1981க்கு பின்னர் அதிகப்படியான வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த தேர்தல் களமாக இவ்வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மாறியது.

இது இவ்வாறு இருக்க அதே தேர்தல் களமே அதிக செல்லுபடியற்ற வாக்குக்கள் கிடைத்த தேர்தல் களமாகவும் உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் சுற்றில் தீவிர வலதுசாரி கட்சிகள் (Rassemblement National, les Républicains) கூடிய சதவீத வாக்குகளை பெற்று முதலாம் இடத்தினை பெற்றதை அடுத்து, இடதுசாரிகளும், Ensemble (Majorité présidentielle) கட்சியினரும், வலதுசாரிகளின் பலத்தை உடைக்க தங்கள் வேட்பாளர்களை பல இடங்களில் பின்வாங்க செய்து தேர்தலில் வெற்றி பெற்றும் வியூகத்தை வகுத்தனர்.

இதனால் பல இடங்களில் தீவிர வலதுசாரி (RN) வேட்பாளரும், தீவிர இடதுசாரி (LFI) வேட்பாளரும் மட்டுமே மோதினர். 

அவ்வாறான பகுதிகளில் இருவரையும் விரும்பாத பல வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சீட்டில் படங்களை வரைதல், இருவரையும் தீட்டி வாசகங்களை எழுதுதல் என தங்கள் வாக்குகளை செல்லுபடி அற்ற வாக்குகளாக மாற்றியுள்ளனர்.

 400 000 வாக்குகளை செல்லுபடி அற்ற வாக்குகளாக செலுத்தும் மனோநிலை மக்களுக்கு வருவதற்கு முக்கிய காரணம் பொருத்தமற்ற காலகட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது என கருதப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!