கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு!

ரயில் தடம் புரண்டதால், கடலோர ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று (09.07) காலை பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த புகையிரதமே கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரையோரப் புகையிரதத்தின் இரண்டு தடங்களும் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இதன் காரணமாக காலியில் இருந்து இயக்கப்படும் புகையிரதங்கள் கொம்பஞ்சாவீதிய நிலையம் வரை மட்டுமே பயணிக்கும்.

எவ்வாறாயினும், இது வரை தடம் புரளும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக ரயில் சேவை வழமைக்கு திரும்ப இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4