பிரதமர் மோடியை விருதுடன் கௌரவித்த புதின்
இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.
இதற்கிடையே, மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வணிகம், எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், ரஷியாவின் உயர்ந்த விருதான ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ த அபோஸ்தல் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் புதின் அளித்து கவுரவித்தார்.
இந்த உயர்ந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.