கும்ப ராசியினருக்கு வியபாரம் முன்னேற்றமடையும் எதிர்பார்ப்பு நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
கும்ப ராசியினருக்கு வியபாரம் முன்னேற்றமடையும் எதிர்பார்ப்பு நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தடைப்பட்ட முயற்சி நிறைவேறும்.பரணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். செயல்களில் தடை உண்டாகும்.கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடை நீங்கும். நீங்கள் எதிர் பார்த்த தகவல் வரும். முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.ரோகிணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் லாபம் தோன்றும். விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும். உங்கள் செயல்களுக்கு நண்பர் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: தடைகளைத் தாண்டி சாதிக்கும் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர். வருவாய் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: பண வரவில் இருந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சி நிறைவேறும்.பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.ஆயில்யம்: உங்கள் பேச்சாற்றலால் செயலில் வெற்றி காண்பீர். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.பூரம்: அரசியல்வாதி ஆலோசனைக்கு மதிப்பு ஏற்படும். மற்றவரால் பாராட்டப்படுவீர். வரவு அதிகரிக்கும்.உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். முன்னேற்றம் ஏற்படும். நினைத்ததை சாதிப்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: நெருக்கடி விலகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும்.அஸ்தம்: மனம் குழப்பமடையும். செயல்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர். சேமிப்பில் கவனம் செல்லும்.

துலாம்

சித்திரை 3,4: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து ஒருசிலர் உங்களை சந்திப்பர்.சுவாதி: திட்டமிட்டிருந்த வேலையில் மாற்றம் செய்வீர். செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்கள் ஆதரவால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.

விருச்சிகம்

விசாகம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் உண்டான சிக்கல் தீரும். வரவு திருப்தி தரும்.அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். செயல்களில் அதிகபட்ச கவனம் செலுத்துவது நல்லது.கேட்டை: உங்கள் செயலில் எதிர்பார்த்த லாபம் அடைவீர். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

தனுசு: 

மூலம்: நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். அனுபவம் மூலம் முயற்சியில் வெற்றி காண்பீர்.பூராடம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். கவனமாக செயல்படுவதுடன் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்திராடம் 1: பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர். வரவேண்டிய பணம் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். செயல்களில் லாபம் தோன்றும். நெருக்கடி விலகும்.திருவோணம்: தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மனதில் குழப்பம் தோன்றும்.அவிட்டம் 1,2: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தால் குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியபாரம் முன்னேற்றமடையும் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். சதயம்: உங்கள் விருப்பதிற்கு மாறாக குடும்பத்தினர் செயல்படுவர். பழைய விவகாரம் மீண்டும் உருவெடுக்கும்.பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மறைமுக எதிரி விலகிச்செல்வர். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: உழைப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். பிரச்னை தேடிவரும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.