போராட்டத்தில் குதித்த புகையிரத நிலைய அதிபர் சங்கம் : பயணிகள் அவதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
போராட்டத்தில் குதித்த புகையிரத நிலைய அதிபர் சங்கம் : பயணிகள் அவதி!

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09.07) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதனால் இன்று மதியம் போக்குவரத்து வசதிகளை பெற வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட 14 பிரச்சினைகளை முன்வைத்து நிலைய அதிபர் சங்கம்  இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.  

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொழில்சார் நடவடிக்கையின் காரணமாக, இயங்குவதற்கு தயாராக இருந்த தபால் புகையிரதங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகிறது. 

இதற்கிடையில், இன்று (10.07) சில அலுவலக ரயில்களை தேவையான அதிகாரிகளுடன் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக  புகையிரத சீசன் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் சீசன் பயணச்சீட்டை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை போக்குவரத்து அமைச்சு வழங்கியுள்ளது. 

இதேவேளை, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்பு சட்டவிரோதமானது எனவும், புகையிரத சேவைகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பணிக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4