பிரான்ஸில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடசாலைகள்

#School #France #education #Teacher
Prasu
1 year ago
பிரான்ஸில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடசாலைகள்

பிரான்ஸில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நெருக்கடி தொடர்வதாக தெரியவந்துள்ளது.

3,000 இற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டில் 23,696 ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் கோரப்பட்டிருந்தன.

இவற்றில் 3,185 பணியிடங்கள் இன்னனும் வெற்றிடங்கள் உள்ளது. இவற்றில் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களே நிரப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆசிரியர்கள் வெற்றிடங்களில் 2,925 அரச பணியிடங்களும், 260 தனியார் பணியிடங்களும் ஆகும்.

 ஆண்டு தோறும் ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்படுகின்ற போதும், கடந்த பல ஆண்டுகளாக பிரான்ஸில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4