விருச்சிக ராசியினருக்கு பொருளாதார நெருக்கடி விலகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
விருச்சிக ராசியினருக்கு பொருளாதார நெருக்கடி விலகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். யோகமான நாள்.பரணி: உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். வருமானம் உயரும்.கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திடீர் வியாபாரத்தினால் பொருளாதார நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.ரோகிணி: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வரவில் தடையும் தாமதமும் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.மிருகசீரிடம் 1,2: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய பொருள் சேரும். வியாபாரத்தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.திருவாதிரை: உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் வேலைகளை மற்றவரிடம் ஒப்படைப்பதால் நெருக்கடி உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: வருமானத் தடை விலகும். நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும். பழைய கடன் வசூலாகும்.பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வீர். பணச்சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். பூரம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். மனம் தெளிவாகும். வரவேண்டிய பணம் வரும். தேவை பூர்த்தியாகும்.உத்திரம் 1: அனுசரித்துச் சென்று லாபம் காணும் நாள். பெரியவர் வழிகாட்டுதல் லாபம் தரும். வியாபாரம் விருத்தியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நினைப்பதை நடத்தி முடிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். தடைப்பட்ட பணம் வரும்.அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் உதவியால் எண்ணம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த லாபம் அடைவீர்.சுவாதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயலால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சி நிறைவேறும். இழுபறி விவகாரம் சாதகமாகும்.கேட்டை: வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு வரும். உங்கள் சங்கடம் நீங்கும்.

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும். பூராடம்: வருமானத்தில் கவனம் செலுத்துவீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் முயற்சி லாபமாகும்.திருவோணம்: உங்கள் செயல்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத தடையை சந்திப்பீர்.அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்படுவதால் விரயம் ஏற்படாமல் போகும். மனக்குழப்பம் உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் நினைப்பது நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும்.சதயம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். நண்பர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.உத்திரட்டாதி: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். அலுவலகப் பணி நெருக்கடியை அதிகரிக்கும்.ரேவதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். உங்கள் செயலில் லாபம் உண்டாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!