மிதுன ராசியினருக்கு வியாபாரத்தில் சிறு தடை தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மிதுன ராசியினருக்கு வியாபாரத்தில் சிறு தடை தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நன்மையான நாள். உற்சாகமாக செயல்படுவீர். நீங்கள் எண்ணியது நிறைவேறும். பரணி: வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடியும்.கார்த்திகை 1: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலை பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நெருக்கடியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் தடை உண்டாகும்.ரோகிணி: யோகமான நாள். பழைய செயலில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு தடை தோன்றும்.திருவாதிரை: உங்கள் முயற்சி லாபமாகும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நாள்.புனர்பூசம் 1,2,3: நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். அலுவலகப் பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

கடகம்

புனர்பூசம் 4: செயலில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் முயற்சி நீண்ட இழுபறிக்குப்பின் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடை விலகும். பூசம்: சிந்தித்து செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிறு பிரச்னை உண்டாகும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் முயற்சி முன்னேற்றத்தை உண்டுபண்ணும். உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம்.அஸ்தம்: முயற்சியில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: தொழிலில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

சித்திரை 3,4: அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தால் செலவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: திட்டமிட்ட முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.விசாகம் 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

விசாகம் 4: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். இன்று வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.அனுஷம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். பழைய பிரச்னை ஒன்று முடியும்.கேட்டை: முயற்சியால் வெற்றி அடையும் நாள். எளிதாக முடியும் என நினைத்த வேலை இழுபறியாகும்.

தனுசு

மூலம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பண நெருக்கடி நீங்கும். சங்கடங்கள் தீரும்.உத்திராடம் 1: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். குடும்பத்தினரால் மனம் குழப்பம் அடையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும். உங்கள் முயற்சி இழுபறியாகும்.திருவோணம்: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும் நாள்.அவிட்டம் 1,2: உங்கள் கவனத்தை வேறு வழியில் கொண்டு செல்வதால் நெருக்கடி ஏற்படும். குழப்பம் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி லாபம்தரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலை எடுக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.உத்திரட்டாதி: உடன் பணிபுவர் உதவியால் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும். குழப்பம் விலகும்.ரேவதி: அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.