டிக் டாக்கில் ஜனாதிபதியை அவமதித்த இளைஞர் - 6 ஆண்டுகள் சிறை தண்டனை
டிக் டாக் வீடியோ மூலம் உகாண்டா அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை அவமதித்த 24 வயது இளைஞருக்கு உகாண்டா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
உகாண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்டமை மற்றும் முதல் பெண்மணி மற்றும் உகாண்டாவின் இராணுவத் தளபதி ஜனாதிபதி புட் மஹுசி குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி முசெவேனியின் கீழ் வரி அதிகரிப்பு ஏற்படவுள்ளதாகவும் இந்த இளைஞன் தவறான தகவல்களை பரிமாறிக்கொண்டமை தொடர்பிலும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், இந்த வீடியோக்களில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மன்னிக்க முடியாத ஆபாசமானவை என உகாண்டா நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க கற்றுக் கொள்வதாகவும், ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு உரிய தண்டனையுடன் மரியாதை செலுத்துவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.