சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு

#Australia #Event #lanka4news #Sydney
Prasu
4 months ago
சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு

“பலவீனமான எமது மக்களின் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். 

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள்;. எமது போராட்ட பாதையின் தடைநீக்கிகள். 

எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்.” எனத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டதெய்வீகப் பிறவிகளை நினைவுகூரும் கரும்புலிகள் நாள் நிகழ்வு 05-07-2024 வெள்ளிக் கிழமை அன்று சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

images/content-image/2024/1720802652.jpg

சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், தமிழீழ அரசியல் துறையினரும் இணைந்து கரும்புலிகளை நினைவுகூரும் நிகழ்வை பொது மக்களின் பங்களிப்புடன் இரு அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கமைத்தனர்.

மாலை 7 மணிக்கு Wentworthville Community Centre ஆரம்பமான நிகழ்வில் பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் சகோதரன் ஐங்கரன் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகளை தமிழ்த் தேசியச் செயற்பாட்டளர்களான நிசாந்தன் மற்றும் திருச்செல்வம் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

images/content-image/1720802667.jpg

ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் திருவருட்செல்வன்/தோழன் அவர்களின் சகோதரன் ஜெயச்செல்வன் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்ககம் நடைபெற்று, நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் கரும்புலிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் கரும்புலிகள் நினைவுப் பாடல்களை பவித்திரன் மகேந்திரன், சிருஸ்திகா செல்வம், ஜெய்கரன் ஆகியோர் பாடியதைத் தொடர்நது கார்த்திக் பிரபாகர் மற்றும் சுஜிர்த்தனா பிரதீபன்,அபிசயா மதிவதன் ஆகியோரின் கரும்புலிகள்பற்றிய பேச்சு இடம்பெற்றது. 

images/content-image/1720802734.jpg

கரும்புலிகள் பற்றி வியாசன் அவர்கள் எழுதிய கவிதையை சுலோஜனா வழங்க, கபிசன் நரேஸ்குமார் மற்றும் வாகீஸ்வரன் தமிழரசன் ஆகியோர் இணைந்து இன்னொரு கவிதையை வழங்கினர்.

கரும்புலிகள் பற்றிய நினைவுப் பகிர்வை வழங்கிய முன்னாள் போராளியும் அரசியல் செயல்பாட்டாளருமான தேசிகன் அவர்கள் தற்காலத்தின் எமது இனம் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

images/content-image/1720802747.jpg

ஆநதீ அவர்களின் கரும்புலிகள் பற்றிய நினைவுப் பகிர்வைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு, தேசியக்கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு உறுதியுரையோடு நிகழ்வு நிறைவுபெற்றது.

images/content-image/1720802760.jpg

images/content-image/1720802776.jpg

images/content-image/1720802797.jpg

images/content-image/1720802809.jpg

images/content-image/1720802873.jpg

images/content-image/1720802888.jpg

images/content-image/1720802900.jpg

images/content-image/1720802912.jpg

images/content-image/1720802925.jpg

images/content-image/1720802939.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!