பிரான்சில் கடந்த மாதம் நடந்த வீதி விபத்துக்களில் 291 பேர் பலி

#Death #France #Accident #Road #2024
Prasu
4 months ago
பிரான்சில் கடந்த மாதம் நடந்த வீதி விபத்துக்களில் 291 பேர் பலி

கடந்த ஜூன் மாதத்தில் பிரான்சில் 291 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டதாக வீதி போக்குவரத்துக்கான பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.

சென்ற வருட ஜூன் மாதத்தில் 286 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அதனோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலதிக தரவுகளில் இருந்து.. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 1,519 பேர் வீதி விபத்துக்களில் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 145 பேர் வாகன சாரதிகள் எனவும், 26 பேர் துவிச்சக்கரவண்டி செலுத்துனர்கள் எனவும், 33 பேர் பாதசாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நெடுஞ்சாலைகளிலேயே விபத்துக்குள்ளாகியிருந்தனர்.

 மொத்தமாக கடந்த 12 மாதங்களில் வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்கள் அதற்கு முந்தைய 12 மாதங்களோடு ஒப்பிடுகையில் 5% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் trottinettes électriques என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணித்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 36% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!