நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 22 மாணவர்கள் மரணம்
வடக்கு மத்திய நைஜீரியாவில் நேற்று காலை வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு மாடி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிளாட்டு மாநிலத்தின் புசா புஜி பகுதியில் உள்ள செயிண்ட்ஸ் அகாடமி பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சில நிமிடங்களில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த கோர விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
இதில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 132 மாணவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 22 மாணவர்கள் உயரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து, நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் கூறுகையில்," விபத்து ஏற்பட்ட உடனே சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.