ரிஷப ராசியினருக்கு கோயில் வழிபாட்டில் மனம் தெளிவடையும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
ரிஷப ராசியினருக்கு கோயில் வழிபாட்டில் மனம் தெளிவடையும் - ராசிபலன்

மேஷம்:

அசுவினி: திட்டமிட்டிருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர். வருமானத்தில் இருந்த தடை விலகும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளர் உருவெடுப்பர்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கோயில் வழிபாட்டில் மனம் தெளிவடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.ரோகிணி: நண்பர்கள் உதவியுடன் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற சிந்தனையால் மனம் குழப்பம் அடையும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும் நேற்றைய எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பூர்வீக சொத்தில் உறவினரால் பிரச்னை தோன்றும்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப்போகும். நெருக்கடிகளை சந்திப்பீர்.பூசம்: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி பெறுவீர். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும்.ஆயில்யம்: வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பாராத செலவு தோன்றும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரம்: குடும்பத்தினரால் நெருக்கடி உண்டாகும். உதவி கேட்டு செல்லும் இடத்தில் சங்கடத்திற்கு ஆளாவீர்.உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் தேடி வருவர்.அஸ்தம்: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை அகலும்.சித்திரை 1,2: பிறரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். தம்பதிகளுக்குள் வாக்குவாதம் தோன்றி மறையும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சி இன்று தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் தோன்றும். சுவாதி: குடும்பத்தேவையை நிறைவேற்றுவீர். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். 

விருச்சிகம்

விசாகம் 4: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறாமல் தள்ளிப்போகும்.அனுஷம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்கள் லாபமாகும். வரவேண்டிய பணம் வீடுதேடி வரும். கேட்டை: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும்.

தனுசு

மூலம்: வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திராடம் 1: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.திருவோணம்: உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாதீர். அவிட்டம் 1,2: உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர். 

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வீண் பிரச்னை தேடிவரும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.சதயம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி இழுபறியாகும். தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. 

மீனம்

பூரட்டாதி 4: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நட்புகளால் பிரச்னை உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.ரேவதி: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.