கன்னி ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
கன்னி ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வரும். அலுவலக நெருக்கடி குறையும். பரணி: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பணிபுரிபவர் ஆதரவாக இருப்பர்.கார்த்திகை 1: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். தொழில் போட்டியாளர்களால் சங்கடம் அடைவீர்.ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழில் எதிரி விலகிச்செல்வர்.மிருகசீரிடம் 1,2: நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.திருவாதிரை: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். பணியாளர்களால் சிறு பிரச்னை தோன்றும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். ஆதாயமான நாள்.பூசம்: உடலில் சோர்வு தோன்றும். வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். கடும் போராட்டத்திற்குபின் முயற்சியில் வெற்றி காண்பீர்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

சிம்மம்

மகம்: திடீர் நெருக்கடியால் சங்கடத்திற்கு ஆளாவீர். பழைய பிரச்னை மீண்டும் உருவெடுக்கும். அமைதி காக்க வேண்டிய நாள்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலுவலகத்தில் உங்களை சோதிக்கும் அளவிற்கு சிலர் செயல்படுவர். வேலை பளு அதிகரிக்கும்.அஸ்தம்: எதிர்பார்த்த பணம் வரும். வரவின் காரணமாக சேமிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.சித்திரை 1,2: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சி வெற்றியாகும்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயலில் தெளிவு இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்.சுவாதி: செயல்களில் தடுமாற்றம் அடைவீர். எதிர்பார்த்தவற்றில் தாமதம் ஏற்படும். மனதில் குழப்பம் உண்டாகும்.விசாகம் 1,2,3: விலகிச் சென்ற வாடிக்கையாளர் உங்களைத்தேடி வருவர். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். தொலைந்துபோன பொருள் உங்கள் கைக்கு வரும். அனுஷம்: உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

தனுசு:

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள் பணிபுரியும் இடத்தில் நீங்கள் பதில் சொல்லும் நிலை உருவாகும்.பூராடம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர். நண்பர்கள் ஒத்துழைப்பால் நன்மை உண்டு.

மகரம்

உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சிறு தடை உண்டாகும். லாபம் தள்ளிப்போகும்.திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்றுவரை தடைபட்ட முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: செயல்களில் சிரமம் தோன்றும். வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள்.பூரட்டாதி 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட பணம் வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும்.

மீனம்

பூரட்டாதி 4: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும். விருப்பம் நிறைவேறும்.உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளிலும் இன்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.ரேவதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.