பாரிஸில் ராணுவ வீரர் மீது தாக்குதல் - கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்

#Arrest #France #Attack #Soldiers #Knife #Congo
Prasu
3 months ago
பாரிஸில் ராணுவ வீரர் மீது தாக்குதல் - கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்

நேற்று Gare de l'Est பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 'opération Sentinelle' ராணுவ வீரர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டார்.

பின்னர் தாக்குதலாளி உடனே நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி மனவளம் பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியில் மனவள மருத்துவமனையில் வைத்து அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் தாக்குதலாளி கொங்கோ நாட்டில் பிறந்த 40 வயதான ஒரு கிறிஸ்தவர் என்றும், 2006 இல் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது. 

அத்தோடு தாக்குதல் நடத்தும் போது அவர் "அல்லாஹூ அக்பர்" என கோசமிடவில்லை என்றும் மாறாக "கடவுளே மேலானவர்" 'Dieu est grand' என்றே கோசமிட்டார் என்றும் விசாரணையில் மேலும் தெரியவத்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் "பிரான்ஸ் இராணுவம் எங்கள் நாட்டில் (கொங்கோ) எமது மக்களை கொன்றார்கள் அதன் வெறுப்பே இந்த தாக்குதல" என தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக சரியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் குறித்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!