வேல்ஸின் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த வான் கெதிங்

#Resign #Minister #Wales
Prasu
4 months ago
வேல்ஸின் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த வான் கெதிங்

பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் அரசாங்கத்தின் தலைவர் வாகன் கெதிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் மீது சுமத்தப்பட்ட பிரசார நன்கொடை ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வாகன் கெதிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெல்ஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் விலகும் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். அதன் விளைவாக வேல்ஸ் அரசின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம், வெல்ஷ் தொழிலாளர் கட்சியின் தலைவராக வாகன் கெதிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறிய ஒரு தனியார் மறுசுழற்சி நிறுவனத்திடமிருந்து வாகன் கெதிங் தேர்தல் பிரசார நன்கொடையாக 200,000 பவுண்டுகள் (சுமார் ரூ.2.13 கோடி) பெற்றதாக அவர் மீது குற்றச்சாடுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!