மேஷ ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மேஷ ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி : விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர்.பரணி: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் நாள். எதிர்பார்த்த பணமும் தகவலும் வரும்.கார்த்திகை 1: நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். தேவையற்ற சங்கடத்தையும் ஒருசிலர் அடைவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் செயலில் தடையும் தாமதமும் உண்டாகும். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.மிருகசீரிடம் 1,2: உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடி தோன்றும். அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். உங்களுடன் நன்றாக பழகியவர்களும் எதிராவார்கள்.திருவாதிரை: தொழில் போட்டியாளரால் தோன்றிய சங்கடத்திற்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை சீராகும். முயற்சியில் இருந்த தடை விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்.பூசம்: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். புதிய முயற்சியையும், வெளியூர் பயணத்தையும் தள்ளி வைப்பது நல்லது.ஆயில்யம்: உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.

சிம்மம்

மகம்: தடை தோன்றும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திட்டமிட்ட முயற்சி இழுபறியாகும். பூரம்: உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1: வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சில தடை தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். குடும்பத்தில் கவனம் செலுத்துவது நல்லது.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி லாபம் தரும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.சித்திரை 1,2: பணியாளர்களால் சங்கடங்களுக்கு ஆளாவீர். தொழிலில் பொறுப்பு கூடும். வேலைபளு அதிகரிக்கும்.

 துலாம்

சித்திரை 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வார்த்தை வழியே பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் அமைதி காப்பது நல்லது.சுவாதி: நேற்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். பண நெருக்கடி நீங்கும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். புதிய பொருள் சேரும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் விருப்பம் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் செயலில் லாபம் காண்பீர். அனுஷம்: மனக்குழப்பம் தோன்றும். உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.கேட்டை: நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். உங்கள் செயலில் லாபம் உண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: திடீர் செலவு ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி புரிவார்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் செயலில் எதிர்பாராத தடை தோன்றும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.திருவோணம்: நண்பர்கள் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும். அவிட்டம் 1,2: தொழிலில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். கடன் கொடுத்தவர் தேடி வருவர். சிந்தித்து செயல்படுவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். சதயம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையை சரிசெய்வீர். 

மீனம்

பூரட்டாதி 4: கவனமாக செயல்படுவதால் இழப்பு ஏற்படாமல் போகும். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். எதிர்பாராத பிரச்னையும் மனதில் குழப்பமும் ஏற்படும்.